ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 24-ஆவது ஆண்டில் அடி எடுத்து வைப்பதையொட்டி, வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்து ஜெட் ஏர்வேஸ் விமானங்களிலும், சாதாரண வகுப்பு மற்றும் உயர் வகுப்பு அடிப்படைக் கட்டணங்களில் 24 சதவிகித சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் இயக்கப்படும் விமானங்களில் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டும் சாதாரண வகுப்பில் பயணம் செய்வோருக்கும் இந்த சலுகை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உள்நாட்டில் 65 விமானங்கள், வெளிநாடுகளுக்கு 47 விமானங்கள் என மொத்தம் 112 விமானங்களை இயக்கி வருகிறது.