ரூ.538 கோடி மோசடி வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கைது: அமலாக்கத்துறையினர் அதிரடி

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
naresh goyal
naresh goyalpt web

இந்தியாவில் முன்னனி ஏர்லைன்ஸ் நிறுவனமாக இருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் படிப்படியாக நஷ்டங்களை சந்தித்தது. இதன் காரணமாக சேவைகளும் படிப்படியாக குறைக்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டு அதன் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது. அதனை அடுத்து அந்நிறுவனம் திவால் நடவடிக்கைக்கும் உட்படுத்தப்பட்டது. 2017 ஆம் ஆண்டுக்கு பின் தொடர்ச்சியான சரிவை சந்தித்த அந்த நிறுவனம் 2018 ஆம் ஆண்டுகளில் ஆயிரம் கோடி சரிவை சந்தித்தது. 2016 ஆம் ஆண்டுகளில் அதன் நிகர லாபம் மட்டும் 600 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நரேஷ் கோயல் வங்கிகளில் கடன்பெற்று மோசடி செய்த வழக்குகளிலும் சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும் கனரா வங்கிக்கு 538 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. இதனை அடுத்து நரேஷ் கோயல் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த மே5 ஆம் தேதி சோதனை நடத்தினர். தொடர்ந்து ஜூலை மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்காக வாங்கிய கடனை அதற்கு பயன்படுத்தாமல் ஜெட்லைட் நிறுவனத்துக்கு பயன்படுத்தியதாக அமலாக்கத்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வழக்கின் விசாரணைக்காக நரேஷ் கோயல் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்றார். தொடர்ச்சியான விசாரணைக்குப் பின் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ச்சியாக அவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com