இந்தியா
விவசாயிகளுக்காக வாழ்ந்தவர் ஜெயலலிதா: அமைச்சர் துரைக்கண்ணு
விவசாயிகளுக்காக வாழ்ந்தவர் ஜெயலலிதா: அமைச்சர் துரைக்கண்ணு
விவசாயிகளுக்காக வாழ்ந்தவர் ஜெயலலிதா என அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளுக்காக வாழ்ந்தவர் ஜெயலலிதா. அதனைப் போல தமிழக அரசும் விவசாயிகளின் நலனை அரண்போல் காத்து வருவதாக தெரிவித்தார்.
தண்ணீர் திறக்க உத்தரவிட்டும் நீர் தர கர்நாடகா மறுப்பு தெரிவிப்பதாகவும், விவசாயிகள் பிரச்னை தொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் கூறினார்.