பாலிவுட்டில் போதைப்பொருள் விவகாரம்: ஜெயா பச்சன் – ஜெயப்பிரதா மோதல்!

பாலிவுட்டில் போதைப்பொருள் விவகாரம்: ஜெயா பச்சன் – ஜெயப்பிரதா மோதல்!

பாலிவுட்டில் போதைப்பொருள் விவகாரம்: ஜெயா பச்சன் – ஜெயப்பிரதா மோதல்!

இந்தி திரையுலகினர் மீதான போதைப்பொருள் புகார் விவகாரத்தில், ஜெயாபச்சன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நடிகை ஜெயப்பிரதா.

நடிகரும், பாஜக எம்.பி.யுமான ரவி கிஷன், ‘பாலிவுட் திரையுலகில் போதைபொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் போதைப்பொருள் நடமாட்டத்திற்கு இவர்களின் துணைகொண்டு செயல்பட்டு இந்திய இளைஞர்களை நாசமாக்குவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

ரவி கிஷனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் பேசிய அமிதாப்பச்சனின் மனைவியும், எம்.பி.யுமான ஜெயா பச்சன், "மக்களவையில் உள்ள ஒரு உறுப்பினர், திரைத்துறையைச் சேர்ந்தவர், திரையுலகினருக்கு எதிராக பேசியது வெட்கமாக இருந்தது. சினிமா பிரபலங்களை தொடர்ந்து வசைபாடுவதை தடுக்க வேண்டும்.

ஒரு சிலரின் தவறுக்காக ஒட்டுமொத்த சினிமாவையும் களங்கப்படுத்துவதை ஏற்க முடியாது. இந்த நாட்டில் அதிக வருமான வரி செலுத்துபவர்களில் பல திரைப்பிரபலங்கள் இருக்கிறார்கள். பிரபலங்கள் பற்றி சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகும் கருத்துகளைக் கண்டு தான் வருந்துவதாகவும், திரைத்துறையினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்'' என்றார்.

ஜெயா பச்சனின் இந்த பேச்சுக்கு திரையுலகினர் இடையே ஆதரவு உருவாகியிருந்தது. இந்நிலையில் மூத்த நடிகை ஜெயப்பிரதா, ஜெயா பச்சனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், ‘’போதைப்பொருட்களிலிருந்து இளைஞர்களைப் பாதுகாக்கும் ரவி கிஷனின் அறிக்கையை நான் ஆதரிக்கிறேன். போதைப்பொருளைப் பயன்படுத்துவதற்கு எதிராக நாம் குரல் எழுப்ப வேண்டும். இளைஞர்களைக் காப்பாற்ற வேண்டும்.

இது தொடர்பாக பேசிய ஜெயா பச்சனின் உணர்வை நான் மதிக்கிறேன்.  ஆனால் இது அரசியலாக்கப்பட வேண்டிய விஷயம் அல்ல. அத்தகைய அறிக்கைகளை வெளியிட அவருக்கு உரிமை இல்லை.

ஜெயா பச்சன் ஏன் இந்த விஷயத்தை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்கிறார்? சுஷாந்த் போன்ற மற்றொரு வழக்கு நடைபெறாதபடி அவர் இளைஞர்களைக் காப்பாற்றுவது பற்றி பேச வேண்டும்’’ என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com