“சந்திரசேகர ராவை சந்திக்க நேரம் கொடுக்காவிட்டால்...” - ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பவன் கல்யாண்

 “சந்திரசேகர ராவை சந்திக்க நேரம் கொடுக்காவிட்டால்...” - ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பவன் கல்யாண்
 “சந்திரசேகர ராவை சந்திக்க நேரம் கொடுக்காவிட்டால்...” - ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பவன் கல்யாண்

தெலங்கானா போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்துக்கு ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆதரவு தெரிவித்துள்ளார். 

தெலங்கானா சாலைப் போக்குவரத்துக் கழகத்தை (TSRTC) முழுமையாக அரசுடன் இணைப்பது, காலிப் பணியிடங்களுக்குப் போதுமான ஆட்களை நியமிப்பது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்குவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கடந்த 5-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதையடுத்து அரசின் எச்சரிக்கையை மீறி, பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் போராட்டம் நீடித்து வருகிறது. பலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிலர் உயிரும் இழந்துள்ளனர். 

இந்நிலையில், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் தெலங்கானா சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளரகளை சந்தித்த பவன் கல்யாண், “முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை கேட்க வேண்டும். ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இரண்டு நாட்களில் சந்திரசேகர் ராவை சந்திக்க முயற்சி செய்வேன். 24 கோரிக்கைகளை முன் வைப்போம். ஒருவேளை முதலமைச்சரை சந்திக்க முடியாவிட்டால், நாங்கள் சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் எடுக்கும் அடுத்த கட்ட முடிவுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம்.” எனத் தெரிவித்தார். 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்டிசி ஊழியர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், பாஜக மற்றும் இடது கட்சிகள் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தெலங்கானா அரசு எதற்கும் இடங்கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. நான்கு வாரங்களுக்கு மேல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் போராட்டத்தை தீர்ப்பதற்கு அரசு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் தெலுங்கானா உயர் நீதிமன்றம் பல முறை தலையிட்டு மாநில அரசு மற்றும் ஆர்டிசி ஊழியர் சங்கங்களை தீர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com