Headlines
Headlinesfacebook

Headlines: இன்று தொடங்கும் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமெரிக்காவில் ஏற்பட்ட விமான விபத்து வரை

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் விமான விபத்தில் 67 உயிரிழந்தது வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
Published on
  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் துவங்குகிறது.

  • நாடாளுமன்றத்தில் நாளை தாக்கலாகிறது 2025-26ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட். பொருளாதார ஆய்வறிக்கையை இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்Twitter
  • வக்ஃப் மசோதா சிறுபான்மையினரை பாதிக்கும் என்பதால் நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்ப்போம் என திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேட்டி.

  • தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக வலியுறுத்தல்.

  • மதுரை அரிட்டாபட்டி சுற்றுவட்டார பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்.

Headlines
‘பராசக்தி’ தலைப்பை யாரும் பயன்படுத்தக்கூடாது.. நேஷனல் பிக்சர்ஸ் அறிவிப்பால் அடுத்த வந்த சிக்கல்!
  • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார். பரப்புரைக்கு சென்றவர்களுக்கு திமுகவினர் பணம் வழங்கியதாக வெளியான வீடியோவால் சலசலப்பு

  • சென்னை ஈசிஆரில் பெண்கள் ஓட்டிச் சென்ற காரை துரத்திய இளைஞர்களின் 2 கார்கள் பறிமுதல். ஒருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை.

திமுக கொடியுடன் உள்ள காரில் சென்ற இளைஞர்கள், பெண்களை அச்சுறுத்திய காட்சி
திமுக கொடியுடன் உள்ள காரில் சென்ற இளைஞர்கள், பெண்களை அச்சுறுத்திய காட்சி
  • புதுச்சேரியில் தனியார் பள்ளிகள் மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்பு நடத்த தடை. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை.

  • பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்து விட்டது என டெல்லியில் நடந்த கருத்தரங்கில் ராகுல் காந்தி வேதனை

  • அமெரிக்கா வாசிங்டன் நகரில் பயணிகள் விமானம் - ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் 67 பேர் உயிரிழப்பு. திறமையான ஊழியர்களை முந்தைய ஆட்சியாளர்கள் நியமிக்காததே விபத்துக்கு காரணம் என அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு.

Headlines
வாஷிங்டன் | ஏர்லைன்ஸ் விமானம், ராணுவ ஹெலிகாப்டர் உடன் மோதி விபத்து! 18 பேரின் சடலங்கள் இதுவரை மீட்பு
  • போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி ஹமாஸ் பிடியில் இருந்த மேலும் 8 பிணைக் கைதிகள் விடுவிப்பு. பாலஸ்தீன ஆதரவுக்குழு முன்னாள் தலைவர் ஜகாரியா உட்பட 110 பேரை விடுவித்தது இஸ்ரேல் அரசு.

  • இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 ஆவது டி20 போட்டி இன்றிரவு புனேவில் நடைபெறுகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய வீரர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com