Headlines
Headlinesfacebook

Headlines | அரிசி சாப்பிட்டதால் உயிரிழந்த பள்ளி மாணவி முதல் தவெகவில் இணையும் ஆதவ் அர்ஜுனா வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது ,அரிசி சாப்பிட்டதால் உயிரிழந்த பள்ளி மாணவி முதல் தவெகவில் இணையும் ஆதவ் அர்ஜுனா வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடக்கம். கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு.

  • கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என உத்தர பிரதேச அரசு அறிவிப்பு.

  • வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை பரிசீலிக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் வரைவு அறிக்கைக்கு ஒப்புதல். மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் இன்று அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு.

  • குடியரசுத் தினத்தில் பங்கேற்ற முப்படைகள் பாசறை திரும்புதல் நிகழ்ச்சி கோலாகலம். டெல்லி விஜய் சதுக்கம் பகுதியில் இசைக்கருவிகள் முழங்க தரைப்படை, கடற்படை, வான்படை வீரர்கள் பாசறை திரும்பினர்.

  • சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் வந்த காரை இளைஞர்கள் துரத்தி தாக்க முற்பட்ட சம்பவம்.பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல், வழிமறித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிவு.

  • பெண்களை துரத்தி சென்று தொல்லை தந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

  • சென்னைக்கு படிக்க வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பெற்றோர்கள் நினைக்கின்றனர் என்று, அகில இந்திய மாதர் சங்கத்தின் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.

  • தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டார் விஜய். சென்னை, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம்.

  • தமிழக வெற்றிக் கழகத்தில் விரைவில் இணைகிறார் ஆதவ் அர்ஜுனா. கட்சியின் கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது.

  • தவெக தலைவர் விஜயுடன் ஆதவ் அர்ஜுனா இணைந்தால் மகிழ்ச்சிதான் என்றும், ஆதவ் அர்ஜுனாவுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.

  • கோவை மேட்டுப்பாளையத்தில் தம்பதி ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

  • நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் என்று, வேங்கைவயல் சம்பவத்தில் ஆர்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனு மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து.

  • தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே பள்ளி மாணவி மூச்சுத்திணறி உயிரிழப்பு. அதிகளவு அரிசி சாப்பிட்டதால் உயிரிழந்த சோகம்.

  • 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

  • விரைவில் தாயகம் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேட்டு கொண்டதின் பேரில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நடவடிக்கை.

  • சவுதி அரேபியாவின் ஜிசன் அருகே சாலை விபத்து நிகழ்விடத்திலேயே 9 இந்தியர்கள் உயிரிழந்த சோகம்.

  • சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் வெளியானது பராசக்தி பட டைட்டில் டீசர். அதர்வா, ரவி மோகனின் கதாபாத்திர அறிமுக வீடியோவிற்கு ரசிகர்கள் வரவேற்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com