Headlines: அமலுக்கு வரும் பொது சிவில் சட்டம் முதல் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணித்த கட்சிகள் வரை!
குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடைபெற்ற விருந்தில் தமிழ் மணம் கமழ்ந்தது. தமிழ் கலாசாரத்தை பறைசாற்றிய வீணை, மிருதங்கம், புல்லாங்குழல்.
ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு. தமிழக அரசு, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.
ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க கிராம சபை கூட்டங்களில் எதிர்ப்பு. இதனால், அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து மக்கள்வெளிநடப்பு.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 34 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்.
வேங்கைவயல் வழக்கில் திமுக அரசு சிபிஐ விசாரணையை தடுக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.
நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் ஒப்பந்தத் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கக் கோரி, கிராமத்தினர் 12 மணி நேரம் போராட்டம்.
டாவோஸ் மாநாட்டில் பெறப்பட்ட முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எவ்வளவு? என்று, முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
கடந்த மூன்று ஆண்டுகளில் 893 தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதில்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன அசாம் சிறுவன் 2 வாரங்களுக்குப் பிறகு ஆந்திராவில் மீட்பு. சிறுவனை கடத்திச் சென்ற 3 பெண்கள் கைது.
விவசாயிகளையும் வேளாண் தொழிலாளர்களையும் பாதுகாக்க வலியுறுத்தல். மயிலாடுதுறை, ஆத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் டிராக்டர் பேரணி.
கேரளாவில் ஆளுநருக்கு அருகே நின்று கொண்டிருந்த காவல் ஆணையர் திடீரென மயங்கி விழுந்தார்.குடியரசுத் தின விழாவில் பரபரப்பு சம்பவம்.
நாட்டில் முதல்முறையாக உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று அமலுக்கு வருகிறது. பிரத்யேக இணையதளத்தை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைக்கிறார்.
பிரிட்டனில் 2500 கோடி ரூபாய் சொத்துக்கு வாரிசான 23 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை. நண்பரை 37 முறை கத்தியால் குத்தி கொன்ற வழக்கில் அதிரடி.
4 மாதங்களில் 827 கோடி ரூபாய் ஊதியமாக பெற்ற ஸ்டார் பக்ஸின் தலைமை செயல் அதிகாரி பிரையன் நிக்கோல். சுந்தர் பிச்சை, டிம் குக் ஆகியோரது ஆண்டு ஊதியத்தை விட அதிகம்.
வளர்ந்து வரும் வீரருக்கான ஐசிசி விருதினை இலங்கையின் கமிந்து மெண்டிஸ் பெற்றார். வீராங்கனைக்கான விருதினை தென்னாப்ரிக்காவின் ஆல்ரவுண்டர் அன்னெரி டெர்க்சன் கைப்பற்றினார்.