Headlines|வேங்கைவயல் வழக்கு முதல் அரசு உயர்நிலைப்பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன் வரை!
குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு. கூடுதலாக 70 கம்பெனி துணை ராணுவப் படைகள் பாதுகாப்பு பணி.
200 அல்ல 234 தொகுதிகளையும் வெல்ல முடியும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை. நாம் தமிழர் உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் 3,000 பேர் இணைந்த நிகழ்ச்சியில் பேச்சு.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை. திமுக ஆட்சியில் இருந்து இறங்குவதற்குள் 10 லட்சம் கோடி ரூபாய் கடனை உருவாக்கிவிடுவார்கள் என பேச்சு.
ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு. காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிக்கும் நிலையில் விஜய் பங்கேற்பாரா என எதிர்பார்ப்பு.
வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டது எப்படி என்பது குறித்து சிபிசிஐடி விளக்கம். 196 மொபைல் எண்கள், 87 டவர்கள், வீடியோ ஆதாரங்கள் உள்ளிட்டவை பகுப்பாய்வு செய்யப்பட்டதாக அறிக்கை.
வேங்கைவயல் வழக்கில் காவல்துறை குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்க கூடாது என திருமாவளவன் வலியுறுத்தல். குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி என்றும் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் கருத்து.
வேங்கைவயல் விவகாரத்தில் யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது? என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி.
பஞ்சாபில் போட்டியின்போது தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல். ஃபவுல் அட்டாக் குறித்து வீராங்கனைகள் முறையிட்டபோது நடுவர் தாக்கியதாக குற்றச்சாட்டு.
பஞ்சாபில் தாக்கப்பட்ட தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்.
சிவகங்கை அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் மின்சாரம் தாக்கி 9 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு. மாணவனின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் உத்தரவு.
நெல்லையில் தாயின் சடலத்தை 15 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் எடுத்து சென்ற மகன். மருத்துவமனையிலிருந்து இருந்து வெளியேற்றப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மையல்ல என மாவட்ட நிர்வாகம் விளக்கம்.
கனிமக் கொள்ளைக்கு எதிராக போராடிய ஜகபர் அலி கொலை வழக்கில், குவாரி உரிமையாளர் ராமையாவுக்கு வரும் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் என திருமயம் நீதிமன்றம் உத்தரவு.
கேரளாவின் வயநாட்டில் பெண்ணைக் கொன்ற புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை தீவிரம். தேவைப்பட்டால் புலியை சுட்டுக்கொல்லவும் உத்தரவு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்.
மத்திய அரசும், டெல்லி காவல்துறையும் அர்விந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி செய்கின்றன என ஆம் ஆத்மி கட்சி பகிரங்க குற்றச்சாட்டு.
டெல்லியின் வளர்ச்சிக்கு அர்விந்த் கெஜ்ரிவால் மிகப்பெரிய தடையாக உள்ளார் என மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி கடும் விமர்சனம்.
உக்ரைன் போர் தொடர்பாக ட்ரம்புடன் பேச்சுவார்த்தைக்கு தயார். அமெரிக்காவின் முடிவுகளை பொறுத்தே பேச்சுவார்த்தை அமையும் என ரஷ்ய அதிபர் புடின் கருத்து.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு தொடக்கம்.
கர்நாடக வனப்பகுதிகளில் படப்பிடிப்புகளை நடத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு. நடிகர் யஷின் "டாக்சிக்" படத்திற்காக வனப்பகுதியில் மரங்களை வெட்டியதாக சர்ச்சை எழுந்த நிலையில் நடவடிக்கை.