\
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்... 3 பேர் உயிரிழப்பு

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்... 3 பேர் உயிரிழப்பு

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்... 3 பேர் உயிரிழப்பு
Published on: 

ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பொறியியல் பிரிவு ஊழியர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் உள்ள பாதுகாப்பு படை பொறியியல் பிரிவு ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பொறியியல் பிரிவு ராணுவ ஊழியர்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பதை கண்காணிக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அக்னூர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com