கடும் குளிரால் உறையும் ஜம்மு காஷ்மீர்: பனிக்கட்டியாகும் நீர்நிலைகள்!

கடும் குளிரால் உறையும் ஜம்மு காஷ்மீர்: பனிக்கட்டியாகும் நீர்நிலைகள்!

கடும் குளிரால் உறையும் ஜம்மு காஷ்மீர்: பனிக்கட்டியாகும் நீர்நிலைகள்!
Published on

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இரவு நேரத்தில் அதிகபட்ச‌ குளிர் பதிவாகியுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் தால் ஏரியின் தண்ணீர் உறைந்து காணப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் 40 நாட்களுக்கு நிலவும் சில்லாய் கலான் எனப்படும் அதிகபட்ச குளிர்காலம் நிலவிவருகிறது. இந்த கடும் குளிரால் ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் புகழ்பெற்ற தால் ஏரி முற்றிலும் உறைந்து காணப்படுகிறது. பரந்து விரிந்து காணப்படும் ஏரியின் தண்ணீர் கண்ணாடி தகடுகளாக காட்சியளிக்கிறது. இந்த இயற்கை அழகை காண சுற்றுலாப் பயணிகள் குவிகிறார்கள்.

காஷ்மீரில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் உறை நிலைக்குச் சென்றுவிட்டன. காஷ்மீரின் பள்ளத்தாக்குப் பகுதியில் இரவு நேரத்தில் மைனஸ் 12 டிகிரி குளிர் பதிவாகியிருக்கிறது. ஸ்ரீநகரில் பகல் நேரத்தில் சராசரியாக மைனஸ் ஐந்து முதல் மைனஸ் ஆறு வரை குளிர் பதிவாகிறது. குல்மார்க், பஹல்கம் ஆகிய பகுதிகளிலும் இதே நிலைதான் தொடர்கிறது.

கடுமையான பனியின் தாக்கத்தால் அனைத்து தரப்பு மக்களும், வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். வெளியே செல்பவர்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்கின்றனர். நீர் நிலைகள் மற்றும் குடிநீர் குழாய்களில் உள்ள தண்ணீர், பனிக்கட்டியாக உறைந்ததால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

பல இடங்களில் அறிவிக்கப்படாத மின் துண்டிப்பால் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. ‌வரும் புத்தாண்டுக்குப் பிறகு கடும் குளிர் மேலும் தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com