\
ஜம்மு காஷ்மீரில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி
Published on

ஜம்மு‌‌‌‌‌‌ காஷ்‌‌மீ‌‌‌‌‌ர்‌‌ மா‌‌‌‌‌நில‌‌த்‌‌‌‌‌‌‌‌தி‌‌ல்‌ பெய்த‌ மழை‌‌ வெ‌ள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனமழை காரணமாக தோடா மாவட்டத்தின் தாத்ரி நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் படோதே - கிஸ்த்வார் நெடுஞ்சாலையில் உள்ள 6-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 11 பேர் படு‌காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இதேபோல் கிஸ்த்வார் மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 45 வயது பெண்மணியும், அவரது 4 வயது பேரனும் உயிரிழந்தனர். உதம்பூர் மாவட்டத்தில் கரை ஒதுங்கிய நிலையில் 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ‌அம்மாவட்டத்தின் காகோட் பகுதியில் 2 பெண்கள் நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர். இதுவரை 13 பேர் உயிரிழந்திருப்பது காஷ்மீரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com