இந்தியாவின் மிகப் பெரிய யூனியன் பிரதேசமாகும் காஷ்மீர்..!

இந்தியாவின் மிகப் பெரிய யூனியன் பிரதேசமாகும் காஷ்மீர்..!
இந்தியாவின் மிகப் பெரிய யூனியன் பிரதேசமாகும் காஷ்மீர்..!

இரண்டாக பிரிக்கப்பட்டதை அடுத்து இந்தியாவின் மிகப்பெரிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் மாறவுள்ளது.

இந்தியாவில் டெல்லி, புதுச்சேரி, டையூ-டாமன், டாட்ரா-நாகர் ஹவேலி, லட்சத்தீவு, அந்தமான்-நிகோபார் தீவுகள், சண்டிகார் என ஏழு யூனியன் பிரதேசங்கள் ஏற்கெனவே உள்ளன. இதில் டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகியவை சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசங்களாக உள்ளன. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகும் இருக்கும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான சட்ட திருத்த மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் யூனியன் பிரதேசங்கள் 9 ஆக உயர்ந்துள்ளன. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாக செயல்படும் என்பதால், சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசங்களில் எண்ணிக்கை மூன்றாக உயரும். அத்துடன் நிலப்பரப்பின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் மிகப்பெரிய யூனியன் பிரதேசமாகும். இரண்டாம் இடத்தை லடாக் பிடிக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com