ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்பு படையினரால் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்பு படையினரால் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர்:  பாதுகாப்பு படையினரால் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் பாந்தா சவுக் பகுதியில் காவல்துறையினர் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 9 பயங்கரவாதிகளை 24 மணி நேரத்தில் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

பாந்தா சவுக் பகுதியில் காவலர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் பதுங்கு இடத்தை கண்டறிந்து, பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். இதில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 24 மணி நேரத்திற்குள் பாதுகாப்புப் படை இந்த பதிலடி தாக்குதலை நடத்தியது.

இந்நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் நூறு பதிலடி தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 182 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாத அமைப்பில் இணைந்த 134 இளைஞர்களில், 72 பேர் கொல்லப்பட்டதாகவும், 22 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். தீவிர கண்காணிப்பு காரணமாக எல்லையில் பயங்கரவாதிகளின் பெரும்பாலான ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com