காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல்: குப்கர் கூட்டணி வெற்றி; பாஜக தனிப் பெரும் கட்சி!

காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல்: குப்கர் கூட்டணி வெற்றி; பாஜக தனிப் பெரும் கட்சி!

காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல்: குப்கர் கூட்டணி வெற்றி; பாஜக தனிப் பெரும் கட்சி!
Published on


ஜம்மு - காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில், ஃபரூக் அப்துல்லா தலைமையிலான குப்கர் கூட்டணி பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதேவேளையில், பாஜகவும் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியிருக்கிறது.

கடந்த ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டதற்குப் பின் நடந்த முதல் தேர்தல் என்பதால், ஜம்மு - காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி மன்றம் என்னும் உள்ளாட்சி அமைப்பு தேர்தல் என்பதால், இது முக்கியத்துவம் பெறுகிறது.

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், மாவட்ட வளர்ச்சி மன்றத்துக்கு கடந்த மாதம் 28–ம் தேதி தொடங்கி இம்மாதம் 19–ம் தேதிவரை 8 கட்டங்களாக தேர்தல் நடந்தது. மாவட்ட வளர்ச்சி மன்றத்தின் 280 இடங்களுக்கு நடந்த இந்தத் தேர்தலில் 2,181 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அமைதியாக நடந்த இந்தத் தேர்தலில் 51 சதவீத வாக்குகள் பதிவாகின.


தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்பட 6 கட்சிகள் இணைந்து ஃபரூக் அப்துல்லா தலைமையிலான குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி எனும் பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டன.

இந்தநிலையில், பலத்த பாதுகாப்புடன் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பல வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குச்சீட்டுகள் ஒன்றாக கலக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதுவரை வெளிவந்த தேர்தல் முடிவுகளின்படி, மொத்தமுள்ள 280 இடங்களில், குப்கர் மக்கள் கூட்டணி 110 இடங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளது.

பாஜக 75 இடங்களை வசப்படுத்தும் நிலையில் இருக்கிறது. இதன்மூலம், ஜம்மு - காஷ்மீரில் கூட்டணி அல்லாத, அதிக இடங்களில் வெற்றிபெற்ற தனிப் பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. ஜம்முவில் இந்து மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய ஜம்மு, உதம்பூர், கத்துவா, சம்பா ஆகிய மாவட்டங்களின் 56 இடங்களில் 49 இடங்களை பாஜக கைப்பற்றியிருக்கிறது.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் 26 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, குப்கர் கூட்டணி மொத்தமுள்ள 20 மாவட்டங்களில் 13 மாவட்டங்களிலும், பாஜக 6 மாவட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com