காஷ்மீரில் ஐஎஸ் கொடியுடன் போராட்டம் : பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு
ஜம்மு-காஷ்மீரில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொடிகளோடு போராட்டம் நடத்தியவர்களை பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்தனர்.
ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், பக்ரித் தொழுகை முடிந்த பின்னர், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு கொடிகளையும், பாகிஸ்தான் நாட்டு கொடிகளையும் ஏந்தியபடி சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். துணிகளால் முகத்தை கட்டிக் கொண்டு ஐஎஸ் அமைப்பு கொடிகளையும், பதாகைகளையும் கைகளில் ஏந்திக் கொண்டு முழக்கங்களை எழுப்பிய படி இளைஞர்கள் போராடினர்.
அப்போது பாதுகாப்பு படையினர் மீது அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. கற்களை வீசிய போராட்டக்காரர்களை, துப்பாக்கிச்சூடு நடத்தி பாதுகாப்பு படையினர் விரட்டி அடித்தனர். இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.