\
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 33 பேர் உயிரிழப்பு

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 33 பேர் உயிரிழப்பு

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 33 பேர் உயிரிழப்பு
Published on

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கிஸ்துவார் அருகே உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். 

கெஷ்வானில் இருந்து கிஷ்வார் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஸ்ரீக்வாரி என்ற பகுதியிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கெஷ்வான் - தக்ரை சாலையில் நடந்த இந்த விபத்தில், 33 பேர் உயிரிழந்துள்ளனர். 10-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். காலை 8.40 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  

விபத்து நடந்த இடத்தில் அதிகாரிகள் மீட்பு பணியில் உடனடியாக ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் கிஷ்வாரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்தில் அளவுக்கு அதிகமானோர் பயணம் செய்ததே விபத்திற்கு காரணம் என்று விபத்தை நேரில் பார்த்த உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com