வரலாற்று சிறப்புமிக்க பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் நியமனம்

வரலாற்று சிறப்புமிக்க பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் நியமனம்

வரலாற்று சிறப்புமிக்க பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் நியமனம்
Published on

ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக நஜ்மா அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் 1920ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் 1988ஆம் ஆண்டு நாடாளுமன்றச் சட்டத்தால் மத்திய பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. அதன்படி இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் துணை வேந்தரை மத்திய அரசு நியமிக்கும். அந்தவகையில் இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நஜ்மா அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஏற்கெனவே ஜாமியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த தாலத் அகமத் கடந்த ஆண்டு பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இந்தப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமிக்க மூன்று பேரை பரிந்துரை செய்தது. அதில் நஜ்மா அக்தர், எஸ்.எம். இஸ்தியாக் மற்றும் ஃபுர்கான் குயாமர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். இவர்களில் இருந்து நஜ்மா அக்தர் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நஜ்மா அக்தர் தற்போது National Institute of Educational planning and administration என்ற தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்துவருகிறார். ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் வேந்தராக மணிப்பூர் மாநில ஆளுநரான நஜ்மா ஹப்துல்லா இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com