முல்லைபெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி ஏரியில், இரட்டை மாடி படகின் போக்குவரத்து மீண்டும் தொடங்கியிருக்கிறது.
‘ஜலராஜா’ என பெயர் கொண்ட அந்த படகில் ஒரே நேரத்தில் 120 பேர் பயணிக்க முடியும். அணையின் நீர்மட்டம் குறைந்தபோது ஏரியிலும் நீர்மட்டம் குறைந்ததால், பாதுகாப்பு கருதி இந்த படகின் போக்குவரத்து ஜனவரி 22-ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 111 அடியைத் தாண்டியதால், மீண்டும் இந்த ஜலராஜா இயக்கப்படுகிறது.