“உலகின் தூய்மையான நதி” - மேகாலயா உம்ங்கோட் ஆற்றின் படத்தை பகிர்ந்த ஜல்சக்தி அமைச்சகம்

“உலகின் தூய்மையான நதி” - மேகாலயா உம்ங்கோட் ஆற்றின் படத்தை பகிர்ந்த ஜல்சக்தி அமைச்சகம்

“உலகின் தூய்மையான நதி” - மேகாலயா உம்ங்கோட் ஆற்றின் படத்தை பகிர்ந்த ஜல்சக்தி அமைச்சகம்

மேகாலயாவில் உள்ள ஒரு ஆற்றின் நீர் மிகவும் சுத்தமாகவும், ஆற்றின் கீழே உள்ள பசுமை மற்றும் கற்பாறைகள் தெளிவாகத் தெரிகிறது. இதனால் படகு தண்ணீரில் மிதக்காமல் நடுவானில் பறப்பது போல் தெரியும் படத்தை ஜல் சக்தி அமைச்சகம் பகிர்ந்துள்ளது, இது தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

இந்த ட்வீட்டில்,  மேகாலயாவில் உள்ள உம்ங்கோட் நதி இடம்பெற்றுள்ளது. தங்கள் நதிகளை சுத்தமாக வைத்திருப்பதற்காக மேகாலயா மாநில மக்களுக்கு அமைச்சகம் நன்றி தெரிவித்தது. மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் இந்த உம்ங்கோட் நதி அமைந்துள்ளது. உலகின் தூய்மையான நதிகளில் இதுவும் ஒன்று என்று ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜல்சக்தி அமைச்சகத்தின் ட்வீட்டில்," மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் நகரிலிருந்து 100 கிமீ தொலைவில் உம்ங்கோட் நதி உள்ளது. இதில் தண்ணீர் சுத்தமாகவும், தெளிவாகவும் உள்ளதால், இந்த படகு காற்றில் இருப்பது போல் தெரிகிறது; நமது நதிகள் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும். மேகாலயா மக்களுக்கு ஹாட்ஸ் ஆஃப்." என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com