\
18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை: ஜெய்சங்கர்

18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை: ஜெய்சங்கர்

18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை: ஜெய்சங்கர்
Published on: 

ஈரானால் சிறைபிடிக்கப்பட்டுள்ள பிரிட்டன் கப்பலில் உள்ள 18 இந்தியர்களையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பாரசீக வளைகுடாவில் ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் சென்றுக் கொண்டிருந்த பிரிட்டன் எண்ணெய் கப்பலை, ஈரான் கடற்படை சிறைபிடித்து வைத்துள்ளது. அந்த கப்பலில் உள்ள 23 பேரில், 18 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரிட்டன் கப்பலில் உள்ள இந்தியர்கள் 18 பேரையும் மீட்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறியுள்ளார். தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இதுகுறித்து ஈரான் அதிகாரிகளிடம் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com