குலாம்நபி ஆசாத்துக்கு பத்மபூஷண்: பாராட்டும், மறைமுக விமர்சனமும்-முரண்படும் காங். தலைவர்கள்

குலாம்நபி ஆசாத்துக்கு பத்மபூஷண்: பாராட்டும், மறைமுக விமர்சனமும்-முரண்படும் காங். தலைவர்கள்
குலாம்நபி ஆசாத்துக்கு பத்மபூஷண்: பாராட்டும், மறைமுக விமர்சனமும்-முரண்படும் காங். தலைவர்கள்

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்துக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது குறித்து அக்கட்சியிலிருந்து முரண்பட்ட கருத்துகள் வெளியாகியுள்ளன

குலாம் நபி ஆசாத் பொது வாழ்க்கையில் ஆற்றிய சேவைகளுக்காக தேசிய அளவில் அங்கீகாரம் தரப்பட்டிருக்கும் நிலையில் அவரது சேவைகள் காங்கிரஸிற்கு தேவைப்படவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தனது கட்சியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். மற்றொரு மூத்த தலைவரான சசி தரூரும் குலாம் நபி ஆசாத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். எனினும் குலாம் நபி ஆசாத்தை மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவரான ஜெய்ராம் ரமேஷ் வார்த்தை ஜாலம் மூலம் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

பத்மபூஷண் விருதை பெற மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மறுப்பு தெரிவித்ததற்கு பாராட்டு தெரிவிக்க பயன்படுத்திய அதே வார்த்தைகளின் ஊடாக குலாம் நபி ஆசாத்தை ஜெய்ராம் ரமேஷ் மறைமுகமாக விமர்சித்துள்ளார். புத்ததேவ் சுதந்திரத்தை விரும்புபவர் என்றும் ஆனால் அடிமையாக இருப்பதை விரும்பாதவர் என்றும் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். இந்தி மொழியில் குலாம் என்பதற்கு அடிமை என்றும் ஆசாத் என்பதற்கு சுதந்திரம் என்றும் பொருள் உள்ளது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தலைமையை விமர்சித்து அக்கட்சியின் 23 தலைவர்கள் கடிதம் எழுதியிருந்தனர். அதில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com