இமாச்சலில் இன்று புதிய அமைச்சரவை பதவியேற்பு

இமாச்சலில் இன்று புதிய அமைச்சரவை பதவியேற்பு

இமாச்சலில் இன்று புதிய அமைச்சரவை பதவியேற்பு
Published on

இமாச்சலப் பிரதேச முதலமைச்சராக ஜெய்ராம் தாகுர் இன்று பதவியேற்கிறார்.

இமாச்சலப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா‌ரதிய ஜனதா பெரும்பான்மையில் வெற்றி பெற்றது. இதையடுத்து அம்மாநில முதலமைச்சர் பதவிக்கு ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‌அவரது தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளதையொட்டி, அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி‌, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com