ஜெய் ஸ்ரீராம் எனக் கூறி தீர்ப்பை வரவேற்ற அத்வானி !

ஜெய் ஸ்ரீராம் எனக் கூறி தீர்ப்பை வரவேற்ற அத்வானி !

ஜெய் ஸ்ரீராம் எனக் கூறி தீர்ப்பை வரவேற்ற அத்வானி !
Published on

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை ஜெய் ஸ்ரீரா‌ம் எனக் கூறி ‌வரவேற்ற அத்வானி, இது தங்களுக்கு மிக முக்கியமானதுடன் மகிழ்ச்சியும் தரும் தீர்ப்பு என கூறியுள்ளார்.

சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு குறித்த தொலைக்காட்சி நேரலையை அத்வானி தன் வீட்டில் குடும்பத்தினருடன் அமர்ந்தவாறு பார்த்தார். விடுவிக்கப்பட்ட தீர்ப்பை அறிந்து மகிழ்ச்சியடைந்த அத்வானி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். ‌அப்போது பேசிய அவர் அயோத்தியில் ராமர் கோயிலை காண படிக்கல்லாக அமைந்த மற்றொரு தீர்ப்பு என்று குறிப்பிட்டார். ‌

இதற்கிடையில் அத்வானி உள்ளிட்டோரை விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல்முறையீடு செய்ய வேண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com