\
பூரி ரத யாத்திரை சாலையில் 144 தடைக்கு திட்டம்: பக்தர்கள் குவிவதை தடுக்க நடவடிக்கை

பூரி ரத யாத்திரை சாலையில் 144 தடைக்கு திட்டம்: பக்தர்கள் குவிவதை தடுக்க நடவடிக்கை

பூரி ரத யாத்திரை சாலையில் 144 தடைக்கு திட்டம்: பக்தர்கள் குவிவதை தடுக்க நடவடிக்கை
Published on: 

ஒடிசாவில் பூரி ரத யாத்திரை நடக்கும் கிராண்ட் சாலையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவை அமல்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை, வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பூரி ரத யாத்திரைக்கு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இருப்பினும் பக்தர்கள் குவிவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 11 ஆம் தேதி இரவு முதல் 13 ஆம் தேதி காலை வரை கிராண்ட் சாலையில் 144 தடை உத்தரவை அமல்படுத்த கோயில் நிர்வாகக் குழு திட்டமிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com