இந்தியா
20 தமிழர்கள் என்கவுன்டர் விவகாரம்: ஜெகன் மோகன் ரெட்டி சாடல்
20 தமிழர்கள் என்கவுன்டர் விவகாரம்: ஜெகன் மோகன் ரெட்டி சாடல்
20 தமிழர்கள் எண்கவுன்டர் செய்யப்பட்டதில் கண்துடைப்பு நாடகமாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திரா மாநிலம் முழுவதும் பாத யாத்திரை செல்லும் அவர், கர்னூலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, செம்மரம் வெட்ட வந்ததாக கூறி 20 தமிழக தொழிலாளர்கள் எண்கவுன்டர் செய்யப்பட்டது முதல்வருக்கு தெரியாமலா நிகழ்ந்திருக்கும், சிறுவர்கள் விளையாடுவது போல் சுட்டு வீழ்த்தியதாகவும் அவர் சாடினார். தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்ட பின்னர், கண்துடைப்பிற்காக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.