\
ஜாதவ் விவகாரம்: இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து

ஜாதவ் விவகாரம்: இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து

ஜாதவ் விவகாரம்: இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து
Published on

இந்திய முன்னாள் கப்பற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ்வுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்திருப்பதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையேயான உறவில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையே 17ம் தேதியன்று நடைபெற இருந்த கடலோரக் காவல்படை பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடலோர காவல்படை அதிகாரிகள் கூட்டத்தில் இரு நாடுகளிடையே எல்லை தாண்டி மீன்பிடிப்பவர்களைப் பரஸ்பரம் விடுவிப்பது, படகுகளை விடுவிப்பது மற்றும் இரு நாட்டுக்கு இடையிலான கடற்பரப்பில் நடைபெறும் கடத்தல் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.இந்நிலையில் ஜாதவ் விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள மத்திய அரசு, அந்தப் பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளது என இந்திய கடலோரக் காவல்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com