குடியரசுத் தலைவருடன் காஷ்மீர் ஆளுநர் திடீர் சந்திப்பு

குடியரசுத் தலைவருடன் காஷ்மீர் ஆளுநர் திடீர் சந்திப்பு

குடியரசுத் தலைவருடன் காஷ்மீர் ஆளுநர் திடீர் சந்திப்பு
Published on

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு குறித்த தகவல், குடியரசுத் தலைவர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவை கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு நீண்ட நாட்களுக்கு பிறகும் அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இருப்பினும், ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக ஆளுநர் சத்யபால் கூறி வந்தார். இந்நிலையில், 370ஆவது பிரிவு நீக்கத்திற்கு பின்னர், இன்றைய சந்திப்பு திடீரென நிகழ்ந்துள்ளது.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 100 பேர் கொண்ட குழு ஒன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com