\
காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு - இரண்டு பயங்கரவாதிகள் என்கவுண்ட்டர்

காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு - இரண்டு பயங்கரவாதிகள் என்கவுண்ட்டர்

காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு - இரண்டு பயங்கரவாதிகள் என்கவுண்ட்டர்
Published on

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட என்கவுண்ட்டரில் பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள கோபல்பூரா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோபல்பூரில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை அவர்கள் சுற்றி வளைத்தனர். இதனையடுத்து, பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

பாதுகாப்பு படை வீரர்களும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குல்காம் மாவட்டத்தில் இண்டெர்நெட் வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

என்கவுண்ட்டர் நடைபெற்ற இடத்தில் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com