காஷ்மீர் துப்பாக்கிச்சூடு: தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மரணம்

காஷ்மீர் துப்பாக்கிச்சூடு: தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மரணம்
காஷ்மீர் துப்பாக்கிச்சூடு: தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மரணம்

ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வீர மரணம் அடைந்தார்.

ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவ வீரர்கள் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகின்றது. இதில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நேற்று பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், பயங்கரவாதிகள் இன்று மீண்டும் நடத்திய தாக்குதலில் மூன்று சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில், சிஆர்பிஎப்-ன் 92வது பட்டாலியனைச் சேர்ந்த 31 வயதான தமிழக வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த தமிழக வீரர் சந்திரசேகர், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழக வீரருடன் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்த இரு வீரர்களும் மரணமடைந்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com