துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் தப்பியோட்டம் - காஷ்மீரில் பதற்றம்

துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் தப்பியோட்டம் - காஷ்மீரில் பதற்றம்

துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் தப்பியோட்டம் - காஷ்மீரில் பதற்றம்
Published on

ஜம்மு காஷ்மீரில், காரில் வந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். அவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால், காரில் வந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதன்பிறகு அப்பகுதியில் கையெறி வெடிகுண்டும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலான ஒரு பொட்டலமும் கண்டெடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com