புத்தாண்டின் முதல்நாளிலேயே எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

புத்தாண்டின் முதல்நாளிலேயே எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

புத்தாண்டின் முதல்நாளிலேயே எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்
Published on

புத்தாண்டின் முதல்நாளிலேயே காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. பூஞ்ச் பகுதிக்கு உட்பட்ட ஷாபூர் என்ற இடத்தில் இந்திய நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதற்கு இந்தியத் தரப்பில் தக்கப் பதிலடி தரப்பட்டுள்ளது. இந்தச் சண்டை சிறிது நேரம் நீடித்ததாக தெரிகிறது. இதில் இந்தியத் தரப்பில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என்று தகவல்கள்‌ தெரிவிக்கின்றன. எல்லைப் பகுதியில் தொடர்ந்து அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நிலையில், புத்தாண்டின்‌ முதல் நாளிலேயே தாக்குதலை தொடங்கியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com