\
காஷ்மீரில் பாக்., அத்துமீறி தாக்குதல்: தமிழகத்தை சேர்ந்த வீரர் மரணம்

காஷ்மீரில் பாக்., அத்துமீறி தாக்குதல்: தமிழகத்தை சேர்ந்த வீரர் மரணம்

காஷ்மீரில் பாக்., அத்துமீறி தாக்குதல்: தமிழகத்தை சேர்ந்த வீரர் மரணம்
Published on: 

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மரணமடைந்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நள்ளிரவில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் ஆர்.எஸ்.புரா செக்டார் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த சுரேஷ் என்ற வீரர் உயிரிழந்தார். 78ஆவது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த இவர், தமிழகத்தைச் சேர்ந்தவர். 1995ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்புப்படையில் இணைந்த சுரேஷ், தலைமைக்காவலராக பதவி வகித்துவந்துள்ளார். எல்லையில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலுக்கு, இந்திய ராணுவத்தினர் உரிய பதிலடியை கொடுத்துள்ளனர். இந்த தாக்குதலால் காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள கிராமப்பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் அப்பகுதியிலிருந்து பொதுமக்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com