அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகளும், அவரது ஆலோசகருமான இவாங்கா அரசுமுறை பயணமாக இன்று காலை இந்தியா வந்து சேர்ந்தார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா சார்பில் ஹைதராபாத்தில் இன்று தொடங்கும் சர்வதேச தொழில்முனைவோர் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இந்த மாநாட்டை தொடங்கி வைக்க வரும்படி பிரதமர் மோடி விடுத்த அழைப்பின்பேரில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா ஹைதராபாத் வந்து சேர்ந்தார். அவருக்கு வெளியுறவுத்துறை அதிகாரிகளும், மாநாட்டு ஏற்பாட்டாளர்களும் வரவேற்பு அளித்தனர்.
பெண் தொழில் முனைவோரை மையப்படுத்தி நடக்கும் விவாதங்களில் பங்கேற்கும் இவாங்கா, புதிய கண்டுபிடிப்புகள், திறன் மற்றும் அதை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிகள் குறித்து விவரிக்கிறார். பின்னர், ஹைதராபாத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சார்மினாரையும் சுற்றிப் பார்க்கவுள்ளார். அதன் பின் வரும் 29 ஆம் தேதி இரவு மீண்டும் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.