இந்தியா
ராமர் கோவில் கட்டுவது எளிதாகி விட்டது: சுப்பிரமணியன் சுவாமி
ராமர் கோவில் கட்டுவது எளிதாகி விட்டது: சுப்பிரமணியன் சுவாமி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதால் அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது எளிதாகி உள்ளதாக, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, மாநிலத்திலும் மத்தியிலும் பாரதிய ஜனதா ஆட்சி என்பதால் ராமர் கோவில் கட்டும் பணி தடையின்றி நடக்கும் என்றார்.
நாட்டின் முக்கியமான மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்கது எனத் தெரிவித்துள்ள சுவாமி, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நடைபெற உள்ள அனைத்து தேர்தல்களிலும் பாரதிய ஜனதா கட்சியே வெற்றி பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.