“எங்களை தாக்கியது அடியாட்கள் தான், விவசாயிகள் அல்ல” - டெல்லி கலவரத்தில் காயம்பட்ட போலீசார்

“எங்களை தாக்கியது அடியாட்கள் தான், விவசாயிகள் அல்ல” - டெல்லி கலவரத்தில் காயம்பட்ட போலீசார்

“எங்களை தாக்கியது அடியாட்கள் தான், விவசாயிகள் அல்ல” - டெல்லி கலவரத்தில் காயம்பட்ட போலீசார்
Published on

'தங்களை தாக்கியது அடியாட்கள் தான் என்றும், விவசாயிகள் இல்லை' என டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் காயம்பட்ட போலீசார், ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஜனவரி 26 அன்று மாபெரும் டிராக்டர் பேரணி டெல்லியில் நடைபெற்றது. திட்டமிடப்பட்ட அனுமதி வழங்கப்பட்ட வழிகளில் பெரும்பாலனா விவசாயிகள் பேரணி நடத்திய நிலையில், சிலர் மட்டும் அனுமதியில்லாமல் செங்கோட்டையையோக்கி பேரணியாக சென்றனர். அப்போது செங்கோட்டையில் கலவரமும் வெடித்தது. 

“கலவரத்தின் போது பணியில் இருந்த காவலர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள அடைக்கலம் அடைந்தனர். நானும் என்னை தற்காத்துக் கொள்ள முயன்றேன். நான் க்ரில் கேட்டை தாண்ட முயன்ற போது, அது சரிந்து என் மீது விழுந்தது. என்னை காப்பாற்றுமாறு கதறிய போதும் காவலர்கள்  அவர்களை தற்காத்து கொள்ள முயன்றனர். பத்து நிமிடங்களுக்கு பிறகே என்னை காவலர்கள் சில மீட்டனர்” என தெரிவித்துள்ளார் டெல்லி பெண் காவலரான ரேகா குமாரி. 

“செங்கோட்டையில் சிக்கியிருந்தவர்களை மீட்ட போது திடீரென கலவரக்காரர்கள் புகுந்து பணியில் இருந்த காவலர்களை கையில் கிடைப்பதை கொண்டு தாக்கினர். நான் அப்போது தான் காயம் பட்டேன்” என்கிறார் 32 வயதான காவலர் சந்தீப் குமார். 

“நான் எனது பணியில் நிறைய போராட்டங்களையும், கலவரங்களையும் சந்தித்துள்ளேன். ஆனால் இதை போல ஒன்றை சந்தித்ததே இல்லை. என்னை எந்த பக்கத்திலிருந்து தாக்கினார்கள் என்பது கூட தெரியவில்லை. முதுகு, தோள்பட்டை மற்றும் கைகளில் என்னை கடுமையாக தாக்கினார்கள். என்னை வாளால் வெட்ட முயன்ற போது தான் அங்கிருந்து தப்பினேன். இருப்பினும் தொடர்ந்து எங்கள் மீது கார்களை எறிந்தனர்” என்கிறார் 53  வயதான துணை உதவி ஆய்வாளர் ஜோகிந்தர் ராஜ். 

கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட போலீசார் இந்த  கலவரத்தில் காயம்பட்டுள்ளனர். இதில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 25 முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதுவரை 19 பேர் கைதாகி உள்ளனர். 

நன்றி : THE QUINT

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com