"தன்னை யாரும் சிக்கலில் மாட்டிவிட வேண்டாம்" பிரதமர் மோடி
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கை நீட்டிக்குமாறு பல்வேறு மாநிலங்கள் பிரதமரை வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பின்போது மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களை கவுரவிக்கும்விதமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொது மக்கள் தங்கள் வீட்டிலிருந்தே கைதட்ட வேண்டும் என கோரியிருந்தார்.
அதேபோல கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனாவுக்கு எதிராக நாடு ஒத்துமையாக இருக்கிறது என்பதை உலகிற்கு எடுத்துறைக்க இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகு, அகல் விளக்கு அல்லது டார்ச் லைட் ஒளிரச் செய்யுங்கள் என கூறியிருந்தார். பிரதமரின் கோரிக்கையை ஏற்று மக்கள் அதுபோலவே செய்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கையொன்றை பொது மக்களுக்கு விடுத்துள்ளார்.
அதில் "என்னை கவுரவிக்கும் விதமாக 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள் என்ற தவறான பிரச்சாரம் பரவி வருகிறது. தயவு செய்து என்னை யாரும் சிக்கலில் மாட்டிவிட வேண்டாம். என்னை கெளரவிக்க விரும்பினால் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு முடியும் வரை ஒரு ஏழைக் குடும்பத்திற்கு உதவும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே நீங்கள் என்னை கெளரவிக்க விரும்பும் செயல்" என தெரிவித்துள்ளார்.