\
மருந்துகளை பரிந்துரைக்க டாக்டர்களுக்கு பல கோடி பரிமாற்றம்

மருந்துகளை பரிந்துரைக்க டாக்டர்களுக்கு பல கோடி பரிமாற்றம்

மருந்துகளை பரிந்துரைக்க டாக்டர்களுக்கு பல கோடி பரிமாற்றம்
Published on

நோயாளிகளுக்கு மருந்துகளை பரிந்துரைப்பதில் டாக்டர்கள், மருந்து நிறுவனங்கள் இடையே கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடைபெற்றதை கண்டறிந்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மும்பை, நாக்பூர், ராஜ்கோட் ஆகிய இடங்களைச் சேர்ந்த 3 முன்னணி டாக்டர்கள் மற்றும் யுஎஸ்வி என்ற மருந்து நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை கடந்த சில நாட்களாக அதிரடி சோதனை நடத்தியது. அந்நிறுவன மருந்துகளை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்க டாக்டர்களுக்கு பணம் தரப்பட்டது தெரிய வந்தது. எனினும், நோயாளிகளுக்கு விழிப்புணர்வு பரப்புரை அளிப்பது உள்ளிட்ட வேறு விதங்களில் இந்த தொகை டாக்டர்களுக்கு தரப்பட்டதாக மருந்து நிறுவனத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும், ஆய்வு முடிவு குறித்து வருமான வரித்துறை உறுதிப்படுத்தவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com