தடுப்பூசிகள் தாமதமானால் உயிரிழப்புகள் அதிகமாகும் - அரவிந்த் கெஜ்ரிவால்
மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவது மத்திய அரசின் பொறுப்பு என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மாநில அரசுகள் தங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை நேரடியாக தாங்களே உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்துகொள்ளுமாறு மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கு பல மாநில அரசுகள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவது மத்திய அரசின் பொறுப்பு என்று கூறியுள்ளார்.
மேலும் தடுப்பூசி வழங்குவதில் தாமதம் செய்தால் மேலும் எத்தனை உயிரிழப்புகள் ஏற்படும் எனத் தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார். தடுப்பூசி நேரடி கொள்முதல் குறித்து உற்பத்தி நிறுவனம் மாநிலங்களுடன் பேச மறுத்தநிலையில் கெஜ்ரிவால் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பில் மத்திய, மாநில அரசுகள் குழுவாக இணைந்து செயல்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.