வளைய சூரிய கிரணகத்தின் போது சாப்பிடலாமா? வேண்டாமா?

வளைய சூரிய கிரணகத்தின் போது சாப்பிடலாமா? வேண்டாமா?

வளைய சூரிய கிரணகத்தின் போது சாப்பிடலாமா? வேண்டாமா?
Published on

நெருப்பு வளைய சூரிய கிரகணம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முழுமையாக தெரிந்தது.

காலை 8 மணி முதல் சூரியனை சந்திரன் மெல்ல மெல்ல மறைக்க தொடங்கியது. பின்னர், சுமார் 9.30 மணியளவில் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நெருப்பு வளைவு சூரிய கிரகணம் முழுமையாக தெரிந்தது. வட்ட வடிவில் நிலவைச் சுற்றிலும் சூரியனின் பகுதிகள் தெரிந்தது.

இதுஒரு புறம் இருக்க சூரியன் கிரகணம் தொடர்பாக பல்வேறு தவறான தகவல்களும் பரவி வருகின்றன. அதில் பலவும் அச்சம் கொள்ளும் வகையில் உள்ளன. சூரிய கிரகணத்தை கண்டு அச்சப்படத் தேவையில்லை என கூறும் விஞ்ஞானிகள், அதனை வெறும் கண்களில் பார்க்க வேண்டாம் எனவும் கூறுகின்றனர். சூரிய கிரகணத்தின் போது திறந்த வெளியில் இருப்பதோ, உணவு உண்பதோ எவ்வித தீங்கையும் ஏற்படுத்தாது என்றும் அவர்கள் விளக்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com