தலைவர் போட்டியில் தோற்றாலும் சசிதரூர் கூடுதல் வாக்குகள் பெற்றிருந்தார் - எப்படி தெரியுமா?

தலைவர் போட்டியில் தோற்றாலும் சசிதரூர் கூடுதல் வாக்குகள் பெற்றிருந்தார் - எப்படி தெரியுமா?
தலைவர் போட்டியில் தோற்றாலும் சசிதரூர் கூடுதல் வாக்குகள் பெற்றிருந்தார் - எப்படி தெரியுமா?

1997, 2000 தேர்தல்களில் தோற்ற வேட்பாளர்களைவிட சசிதரூர் கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த இரண்டு முறை நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தல்களில் தோல்வியடைந்த வேட்பாளர் பெற்ற வாக்குகளைவிட, இந்த முறை சசிதரூர் கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளது தெரிய வந்திருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவுகளின்படி மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசிதரூருக்கு 1,072 வாக்குகள் கிடைத்தன. பதிவான வாக்குகளில் இது 12 சதவிகிதம். இதற்கு முன், 2000ம் ஆண்டில் நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிட்ட ஜிதேந்திர பிரசாதாவுக்கு 94 வாக்குகளே கிடைத்தன. 1997ம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சீதாராம் கேசரி, சரத் பவார் மற்றும் ராஜேஷ் பைலட் களம் கண்டனர்.

அவர்களில் 83 சதவிகித வாக்குகளுடன் சீதாராம் கேசரி வெற்றி பெற்ற நிலையில், சரத்பவாருக்கு 882 வாக்குகளும் ராஜேஷ் பைலட்டுக்கு 354 வாக்குகளும் கிடைத்தன. அவற்றுடன் ஒப்பிடுகையில், இப்போதைய தேர்தலில் சசி தரூர் கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com