அக்னிபாத் திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள்? - அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

அக்னிபாத் திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள்? - அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
அக்னிபாத் திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள்? -  அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நடத்திய ஆலோசனையில் அக்னிபாத் திட்டத்தில் இன்னும் சில மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாக விவாதித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்திவரும்நிலையில், பல அமைச்சகங்கள், இத்திட்டத்தில் சேரும் அக்னி வீரர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதியை வழங்கியுள்ளன. திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவருவது தொடர்பாக, முப்படைகளின் தலைமைத் தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

பாதுகாப்பு துறையின் பணிகளில் அக்னி வீரர்களுக்காக 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய ஆயுதப்படை, அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் 10 சதவிகிதம் அக்னி வீரர்களுக்கு ஒதுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகமும் அறிவித்துள்ளது.

மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகமும் தகுதி வாய்ந்த திறமைமிக்க அக்னி வீரர்களுக்கு தங்களது அமைச்சகத்தின் பணிக்கான முன்னுரிமை வழங்கப்படும் என கூறியுள்ளது. கர்நாடக காவல்துறையிலும், அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அம்மாநிலம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மத்திய கப்பல் படை தளபதி ஹரிகுமார், விமானப்படை தளபதி விவேக் ராம் சவுதரி, ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அக்னிபாத் திட்டத்தில் இன்னும் சில மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாக விவாதித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிக்கலாம்: ராணுவத்தில் சேர தயாராகி வந்த ஒடிசா வாலிபர் தற்கொலை - அக்னிபாத் காரணமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com