பெங்களூரு
பெங்களூருpt

’பெங்களூரில் இது சாதாரணமான ஒன்று ’-IAF அதிகாரி தம்பதி மீதான தாக்குதலுக்கு பிறகு போலீஸ் அளித்த பதில்!

பெங்களூரு சிவி ராமன் நகரில், DRDO காலனியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
Published on

பெங்களூரில் IAF இந்திய விமானப்படை அதிகாரிகளாக பணியாற்றி வருபவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் அதித்யா போஸ் மற்றும் அவரது மனைவி மதுமிதா.

இவர்கள் இருவரும் காரில் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, இவர்களின் காரும் எதிரே ஒரு பைக்கும் மோதுவது போல வந்துள்ளது. இதனால், கோபமடைந்த பைக்கில் வந்த நபர் இவர்களது காரை பின் தொடர்ந்து கன்னடத்தில் தம்பதியை திட்டியபடியே வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. இதில், அதிகாரி அதித்யா போஸ் காயமடைந்தார்.

இது குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அதித்யா, தனக்கு அந்த நபரால் ஏற்பட்ட காயங்களை காட்டியநிலையில், சம்பவத்தின் போது தனக்கு ஏற்பட்ட கசப்பாக சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

ரத்தம் வடிந்த முகத்துடன் வீடியோவில் தோன்றிய அதித்யா, ”எங்களை அந்தநபர் துரத்தியபடியே திட்டிக்கொண்டே வந்தார். எனது காரில் 'டி.ஆர்.டி.ஓ.' ஸ்டிக்கரைப் பார்த்ததும் இன்னும் கோபமடைந்து, எங்களைத் திட்டவும் அடிக்கவும் தொடங்கினார்.

நான் காரைவிட்டு கீழே இறங்கி கேட்டபோது, அந்த நபர் தன் கையில் வைத்திருந்த சாவியால் எனது நெற்றியில் அடித்தார். மேலும், கார் கண்ணாடியின் மீது கல்லை எறிந்தார். ஆனால், இதை வேடிக்கைப்பார்த்த ஒருவர்கூட எங்களுக்கு உதவ முன்வரவில்லை. அருகிலிருந்தவர்கள் எங்களுக்கு கன்னடம் பேச தெரியாததால் அந்த நபருக்குதான் சாதகமாக பேசினர். இது என்னை மிகவும் பாதித்தது.” என்று பதிவிட்டுள்ளார்.

பெங்களூரு
கர்நாடகா டிஜிபி கத்திக்குத்து மரணம் | காரணம் என்ன? மனைவி சொன்ன ஷாக் நியூஸ்!

இந்த சம்பவம் வைரலானநிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள பெங்களூரு காவல்துறை, “பெங்களூரில் இதுபோன்ற சாலை பிரச்னை நடப்பது பொதுவான ஒன்று.” என்று தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், “இருவரும் இந்த சண்டையில் பொறுமையாக இருந்திருக்கவேண்டும். சம்பவம் நடைப்பெற்றபோது 6-7 இளைஞர்கள் இதனை தடுக்க முயன்றுள்ளனர்.

அதிகாரியின் மனைவி கார் ஓட்ட, எதிரே பைக் ஓட்டுநர் ஒருவர் வந்ததால் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதுதான் பிரச்னைக்கான காரணம்.

இந்நிலையில்தான் இருவரும் சரமாறியாக ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டுள்ளனர். இது முழுக்க முழுக்க சாலையில் நடந்த பிரச்னைக்காரணமாக நடந்துள்ளதே தவிர, தனிப்பட்ட தாக்குதலோ அல்லது மொழியை காரணமாக வைத்தோ நடந்தது அல்ல.” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com