\
மத்திய அமைச்சர் பெயரை பயன்படுத்தி மோசடி: நடவடிக்கை கோரி ஆந்திரா முதல்வருக்கு கடிதம்

மத்திய அமைச்சர் பெயரை பயன்படுத்தி மோசடி: நடவடிக்கை கோரி ஆந்திரா முதல்வருக்கு கடிதம்

மத்திய அமைச்சர் பெயரை பயன்படுத்தி மோசடி: நடவடிக்கை கோரி ஆந்திரா முதல்வருக்கு கடிதம்
Published on: 
மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியின் பெயரை பயன்படுத்தி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு அழைப்பாளர் பதவியை பெற்று ஒரு நபர் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகிகள் அண்மையில் நியமிக்கப்பட்டனர். அதில் யெலிஷாலா ரவிபிரசாத் என்பவர் சிறப்பு அழைப்பாளர் பதவியில் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தனது பரிந்துரையின் பேரில் தேவஸ்தானத்தின் சிறப்பு அழைப்பாளராக யெலிஷாலா ரவி பிரசாத் என்பவர் நியமிக்கப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளதாகவும் ஆனால் தான் யாருடைய பெயரையும் பரிந்துரைக்கவில்லை என்றும் அமைச்சர் கிஷண் ரெட்டி தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தனது பெயரை பயன்படுத்தி மோசடி செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அக்கடிதத்தில் முதலமைச்சரை மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com