ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. ஐடி ஊழியர்களுக்கென ஒரு யூனியன்!

ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. ஐடி ஊழியர்களுக்கென ஒரு யூனியன்!

ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. ஐடி ஊழியர்களுக்கென ஒரு யூனியன்!
Published on

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பெருக்கெடுத்த ஐடி நிறுவனங்களில் அதிகப்படியானோர் பணிபுரிந்து வருகின்றனர். நிறைய வருமானத்திற்கு நல்லநிலையில் இருப்பவர்களை கூட ஆட்குறைப்பு நடவடிக்கை என்ற பெரியல் நிறுவனம் உடனடியாக பணி நீக்கம் செய்துவிடுகிறது.

இப்பிரச்னையை கருத்தில் கொண்டு ஐடி ஊழியர்களுக்கென தனியாக எப்ஐடிஇ சங்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை முறைப்படி பதிவு செய்வதற்கான முயற்சியில் அச்சங்கம் வேகமாக செயல்பட்டு வருகிறது. பதிவு வேலைகள் எல்லாம் முடிந்தால், இது தான் ஐடி ஊழியர்களுக்காக இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் சங்கமாக இருக்கும்.

இதுகுறித்து அச்சங்கத்தின் துணைத் தலைவர் வசுமதி கூறுகையில், அனைத்து வேலைகளும் முடிந்து 5 மாதத்திற்குள் சங்கம் பதிவாகிவிடும். இச்சங்கத்திற்கு 1000 ஆன்லைன் உறுப்பினர்களும், 100 ஆக்டிவ் உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சென்னை, பெங்களூரு, ஹைதரபாத் உள்ளிட்ட 9 நகரங்களை சேர்ந்த ஐடி தொழிலாளர்கள் ஆவார்கள். சட்டவிரோதமாக ஐடி ஊழியர்கள் பணியிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். அதனை கருத்தில் கொண்டு இச்சங்கம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com