வேலை போய்விடுமோ என்ற அச்சம்: தற்கொலை செய்த ஐடி ஊழியர்
வேலை போய்விடுமோ என்ற கவலையில் மகாராஷ்ட்ர மாநிலம் புனேவில் மென்பொருள் பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவை சேர்ந்தவர் கோபி கிருஷ்ண துர்கா பிரசாத். ஐடி ஊழியரான அவர், கடந்த 3 தினங்களுக்கு முன்புதான், புனேவில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். இந்நிலையில், நான்காவது மாடியில் இருந்து குதித்து துர்காபிரசாத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன், அவர் எழுதிய கடிதத்தைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில், ஐடி துறையில் பணிப்பாதுகாப்பு இல்லாததால், தன்னுடைய குடும்பத்தைப் பற்றி கவலையடைந்துள்ளதாகவும், இதனால் மனமுடைந்து தற்கொலை செய்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாகவே ஐடி நிறுவனங்களில் எவ்வளவு பெரிய பொறுப்பில் பணியாற்றினாலும் பணிநீக்கம் என்பது இன்றைய காலத்தில் அதிகரித்தே வருகிறது. இந்நிலையில் பணிநீக்கம் குறித்த பயத்தால் புதிதாக வேலைக்கு சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.