"வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம்" நிர்மலா சீதாராமன்

"வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம்" நிர்மலா சீதாராமன்
"வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம்" நிர்மலா சீதாராமன்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் வட்டி 12% இல் இருந்து 9% ஆக குறைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன் " மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான ஜிஎஸ்டியை தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம். ரூ.5 கோடிக்கு கீழ் வருவாய் உள்ள நிறுவனங்களுக்கு எந்தவிதமான அபராதமும் கிடையாது. மேலும் ஆதார் - பான் அட்டைகளை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது." என்றார் அவர்.

தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன் கொரோனா, "வைரஸ் பாதிப்பு காரணமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  மேலும், காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் வட்டி 12% இல் இருந்து 9% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com