22ஆம் தேதி விண்ணில் பாயும் ரிசாட் 2பி - இஸ்ரோ அறிவிப்பு

22ஆம் தேதி விண்ணில் பாயும் ரிசாட் 2பி - இஸ்ரோ அறிவிப்பு
22ஆம் தேதி விண்ணில் பாயும் ரிசாட் 2பி - இஸ்ரோ அறிவிப்பு

ரேடார் பார்வை மூலம் பூமியை கண்காணிக்கும் ரிசாட் 2பி செயற்கை கோளை இஸ்ரோ வரும் 22ஆம் விண்ணில் ஏவ உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் எல்லைகளை கண்காணிப்பதற்காகவும், பாதுகாப்பை அதிகரிக்கும் வகையிலும் ரேடார் பார்வை மூலம் பூமியை கண்காணிக்கு ரிசாட் 2பி செயற்கை கோளை இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கண்டுபிடித்துள்ளது. இந்தச் செயற்கோளை பிஎஸ்எல்வி 46 ராக்கெட் விண்ணில் செலுத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் வரும் மே 22ஆம் தேதி இந்தச் செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் 22ஆம் தேதி காலை 5.27 மணிக்கு ஆந்திராவிலுள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி 46 ராக்கெட் ஏவப்படவுள்ளது. இதற்கான கவுன்ட் டவுன் 22ஆம் தேதிக்கு சில தினங்களுக்கு முன்னர் தொடங்கவுள்ளது. இஸ்ரோ மையம் நடப்பு ஆண்டில் விண்ணில் செலுத்தும் 3வது ராக்கெட் பிஎஸ்எல்வி 46 என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com