விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-42 - இஸ்ரோ அசத்தல்

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-42 - இஸ்ரோ அசத்தல்

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-42 - இஸ்ரோ அசத்தல்
Published on

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இங்கிலாந்து நாட்டின் இரு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது.

விண்வெளிக்கு அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்தபடி பறக்கும் ராக்கெட் தொழில்நுட்பத்தில் இஸ்ரோ அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. தற்போது பிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை வணிக ரீதியில் பயன்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இதன் ஒரு கட்டமாக இங்கிலாந்து நாட்டின் நோவாசார் மற்றும் எஸ்ஒன் ஃபோர் ஆகிய இரு செயற்கைக்கோள்களை சுமந்தபடி, இன்று இரவு 10:08 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-42 விண்ணில் பாய்ந்தது. இதற்கான 32 மணிநேர 37நிமிட கவுண்ட் டவுன் நேற்று பிற்பகல் 1.08 மணிக்கு துவங்கியது.

காப்புக் காடுகளின் பரப்பை கண்காணித்தல், பேரிடர் கால கண்காணிப்பு, கடல்வழி போக்குவரத்து ஆகியவற்றின் பயன்பாட்டுக்காக 445 கிலோ எடையில் நோவாசார் என்ற செயற்கைக்கோளை இங்கிலாந்து தயாரித்துள்ளது. இதேபோல் சுற்றுச்சூழல் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக எஸ்ஒன் ஃபோர் என்ற செயற்கைக்கோளும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளும் 444 கிலோ எடை கொண்டது. இவ்விரு செயற்கைக்கோளையும் சுமந்தபடி செல்லும் இந்தியாவின் பிஎஸ்எல்வி சி 42 ராக்கெட், அதற்காக நிர்ணயிக்கப்பட்ட வட்டப்பாதையில் வெற்றிகரமாக செல்கிறது. இதுவரை 48 இந்திய செயற்கைக்கோள்களும், 209 வெளிநாட்டு செயற்கைகோள்களும் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பிஎஸ்எல்வி ராக்கெட் பூமியில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவு வரை சுமார் ஆயிரத்து 750 கிலோ எடை வரை சுமந்து செல்லும் திறன் படைத்தது. மூன்று வகைகளில் உள்ள பிஎஸ்எல்வி தனது முதல் பயணத்தை கடந்த 1993ஆம் ஆண்டு, செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் இன்று வரை பிஎஸ்எல்வி ராக்கெட்டின் தொழில்நுட்பம் தொடர்ந்து ஏறுமகமாகவே உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com