விண்ணில் எப்போது பாய்கிறது சந்திராயன் - 3? இஸ்ரோ வெளியிட்ட தகவல்!

ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் தெற்கு பகுதியை சந்திராயன் -3 அடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரோ
இஸ்ரோ கோப்பு படம்

நிலவின் தென் பகுதியில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான், கடந்த 2019-ல் செயல்படுத்தப்பட்டது. அப்போது 2019 செப்டம்பர் மாதத்தில் சந்திரயான் லேண்டெர் நிலவின் மேற்பகுதியை நெருங்கும்போது திடீரென செயலிழந்தது.

இஸ்ரோ
இஸ்ரோ pt desk

இந்நிலையில் அடுத்தகட்ட சந்திரயான் திட்டத்தை செயல்படுத்தி, செயற்கைக்கோளை விண்ணில் அனுப்புவதற்கான முயற்சியில் இஸ்ரோ ஆய்வாளர்கள் இறங்கினர். அதன்படி சந்திராயன்-2 திட்டத்தின் ஆர்ப்பிட்டர் இன்னும் நிலவை சுற்றி வரும் நிலையில், அதை மூன்றாவது கட்ட திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ளனர் ஆய்வாளர்கள்.

அதன்படி சந்திராயன் - 3 விண்கலம் ஏவுதலின் போது அது எதிர்கொள்ளும் கடுமையான அதிர்வுகள், ஒலி சூழலை தாங்கும் திறன் போன்றவை பற்றிய அத்தியாவசிய சோதனைகள் முடிவடைந்துள்ளன. இதைத்தொடர்ந்து சந்திரயன் 3-ஐ விண்ணில் ஏவுவதற்கான தேதியை இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதுபற்றி இஸ்ரோவின் ராக்கெட் வடிவமைப்பு மற்றும் ஏவுதல் இயக்குனர் வெங்கட்ராமன் பேசுகையில், “சந்திரயான் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜிஎஸ்எல்வி ராக்கெட் தயார் நிலையில் உள்ளது” என தெரிவித்தார். மேலும் சந்திராயன் -3 ஏவுகலம் ஜூலை 12 அன்று விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் தெற்கு பகுதியை அடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com